October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவரத்தில் இருந்து தாங்கி உரிமையாளர்கள் விலகல்: எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தாங்கி வாகன உரிமையாளர் சங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நேற்று இரவு முதல் தாம் இந்தப் பணியில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தமது வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 60 வீதத்தால் அதிகரிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் இதனாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.எஸ்.சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் 80 வீதமானவை தனியாருக்கு சொந்தமானவையே, இதனால் இவர்கள் பணிகளில் இருந்து விலகினால் எரிபொருள் விநியோகத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.