File Photo
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் இந்தியா நோக்கி பயணமானதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் அமைச்சருடன் இந்தியா சென்றுள்ளார்.
இலங்கை – இந்தியாவுக்கு இடையில் செய்துகொள்ளப்படவுள்ள பொருளாதார உடன்படிக்கைகள் சில தொடர்பாகவும் மற்றும் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடும் வகையிலேயே நிதி அமைச்சர் இந்தியா பயணமாகியுள்ளார்.