October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மதுபான விலைகள் அதிகரிக்கப்பட்டன!

இலங்கையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி இன்று முதல் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளும் 15 முதல் 40 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கமைய இனி அதிவிசேட லேபல் ஒட்டப்பட்ட 750 மில்லி லீட்டர் போத்தலின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பியர் போத்தல்களின் விலைகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.