சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று, முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங், பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏன்-மெரீ கல்டே-வூல்ஃப் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுஸெட்யாவான் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதேவேளை இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இலங்கை தொடர்பான தமது மதிப்பீடு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெளிவுப்படுத்தியுள்ளனர்.