January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் ஹேஸ்டேக் போராட்டம்!

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் ஏட்டிக்குப் போட்டியாக ஹேஸ்டேக் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முதலில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிவினர் #GoHomeGota என்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்ததை தொடர்ந்து, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் #WeAreWithGota என்று பதிவேற்றி வருகின்றனர்.

இதனால்  #GoHomeGota மற்றும் #WeAreWithGota என்ற ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் பிரபலமடைந்துள்ளன.

இதேவேளை உயர்வடையும் விலைவாசிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று கொழும்பில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.