January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது!

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு கூட்டமைப்பினர் கடந்த இரண்டு வருடங்களாக நேரம் கோரி வந்த நிலையில், அந்த சந்திப்புக்கு இன்றைய தினம் நேரம் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சியினர் இன்று கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை ஜனாதிபதி ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் 25ஆம் திகதி சந்திப்பு இடம்பெறும் என ஜனாதிபதி செயலாகத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.