January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழகங்களை திறக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்!

பல்கலைக்கழகங்களை உடனடியாகத் திறக்குமாறு வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று மாலை முதல் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொவிட் தொற்றுப் பரவலை தொடர்ந்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் இரண்டு வருடங்களாக திறக்கப்படாதுள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் கொழும்பில் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.