January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக உயர்வு!

பஸ் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, அது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய 20 ரூபா கட்டணம் 23 ரூபா வரையிலும், 27 ரூபா கட்டணம் 31 ரூபா வரையிலும், 33 ரூபா கட்டணம் 38 ரூபா வரையிலும், 39 ரூபா கட்டணம் 45 ரூபா வரையிலும், 46 ரூபா கட்டணம் 52 ரூபா வரையிலும் அதிரிகரிக்கப்படுகின்றது.

350 பிரிவுகளின் கீழ் 17 ரூபா முதல் 1303 ரூபா வரையிலான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.