சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக இன்றைய தினத்தில் இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதியையும் நிதி அமைச்சரையும் தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது அவர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.