நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின் போது இதனை சமர்ப்பிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மற்றைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தற்போதைய நிதியமைச்சரின் செயற்பாடுகளே காரணம் எனவும், இதனால் அவர் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.