January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: பிரிட்டன் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிரிட்டன் பிரஜைகளுக்கு பயண ஆலோசனை அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு பிரிட்டன் வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு போதுமான நிதியின்மையினால் மருந்து பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட உணவுப் பொருளுக்கு இலங்கையில் தட்டுப்பாடு நிலவுவதாக பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு குறித்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

இதனால் வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதாகவும், நாட்டில் மின்வெட்டும் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை செல்லும் பிரிட்டன் பிரஜைகள் இது தொடர்பில் அவதாமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தமது பிரஜைகளை கேட்டுக்கொண்டுள்ளது.