January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா விசேட திருப்பலி பூசை இன்று நடைபெற்றது.

இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில், நேற்று மாலை 3.30 அளவில் கொடியேற்றதுடன் திருவிழா ஆரம்பமானது.

இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருவிழாவில் இலங்கை, இந்திய பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது.

திருவிழாவில் வடமாகாண கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, ஓய்வுபெற்ற கடற்படை தளபதி அட்மிரல் விஜேகுணரட்ண, யாழிற்க்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி மற்றும் மதகுருமார்கள், கடற்படை இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.