January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் விலைகளை அதிகரித்தது!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

மார்ச் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 254 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 76 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்று 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 254 ரூபாவாகும்.

ஒடோ டீசல் லீட்டர் ஒன்று 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 176 ரூபாவாகும்.

இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனம் 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் விலைகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.