October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தங்கத்தின் விலை 140,000 ரூபாவை தாண்டியது!

டொலரின் பெறுமதி அதிகரித்ததை தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, செட்டியார் தெருவில் இன்றைய தங்க விலைகளின் படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 141,000 ரூபா வரையில் அதிகரித்துள்ளது.

அத்தடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்குள் 10 ஆயிரம் ரூபா வரையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.