January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாண் விலை 30 ரூபாவினால் உயர்வு!

பாண் விலையை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது 80 ரூபாவுக்கு விற்பனையாகும் ஒரு இறாத்தல் பாணின் விலை 110 ரூபா வவரையில் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை பணிஸ் உள்ளிட்ட மற்றைய பேக்கரி உணவுப் பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை 45 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்தே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.