அனைத்து விமான டிக்கெட் கட்டணங்களையும் 27 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டில் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தள்ளார்.
நேற்று முதல் இலங்கையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 260 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து பொருட்கள், சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.