இலங்கையில் கோதுமை மா விலையை 35 முதல் 45 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இதன் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சந்தையில் இதுவரையில் கோதுமை மா கிலோவொன்று 120 ரூபா வரையிலான விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய விலை அதிகரிப்புக்கமை 165 ரூபா வரையிலான விலைக்கு கோதுமனை மா விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை கோதுமை மா விலை அதிகரிப்பை தொடர்ந்து பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஆராய்ந்து வருகின்றது.