January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் மிகவும் வயதான பெண் காலமானார்!

இலங்கையின் மிகவும் வயதான பெண்ணாக கருதப்பட்ட கன்கானம் கமகே டிங்கிஹாமி, காலமானர்.

1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி பிறந்த இவர், 116 ஆவது வயதில் நேற்று காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தின் வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்குரஸ்ஸை, அத்துரலிய பிரதேசத்தில் பிறந்த இந்தப் பெண், வெலிகம – கனங்கேவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார்.

இவர், சைவ உணவு உண்பவர் எனவும், 1982ஆம் ஆண்டு மட்டுமே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கு 50 க்கும் மேற்பட்ட பூட்டப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உள்ளனர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.