கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.
இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளதுடன், நாளைய தினம் கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது.
இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பக்தர்களே அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதன்படி இலங்கையிலிருந்து 100 பேரும் இந்தியாவிலிருந்து 100 பேரும் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
கொவிட் தொற்று நிலைமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொடரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அங்கு இரு மீனவர் குழுக்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.