
இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என்று, நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற, நாட்டின் எரிபொருள் நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் எரிவாயு விலை பெருமளவில் உயர்வடைந்துள்ளாதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கை மட்டுமன்றி உலக நாடுகள் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலமையில் இங்கு அதன் விலையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.