January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்காக முன்னெடுக்கும் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் எதனையும் நிவர்த்தி செய்ய முடியாது என்பதை தாம் காண்பதாக எதிர்க்கட்சித் தலைவர், அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் நீக்கப்பட்டு இதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரசாரப் பணிகளுக்கு சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டியுள்ளார்.