கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி, இன்றைய தினத்தில் பெருமளவான புள்ளிகளால் உயர்வடைந்துள்ளது.
இதன்படி அனைத்துப் பங்குகளின் (ASPI) விலைச் சுட்டி முந்தைய தினத்தை விடவும் இன்று 692.35 புள்ளிகளால் உயர்வடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இது பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய உயர்வாகும்.
முந்தைய தினத்தில், 10,163.72 புள்ளிகளாக காணப்பட்ட அனைத்து பங்குகளின் விலைக் சுட்டி இன்றைய தினத்தின் பங்குப் பரிவர்த்தனை முடிவில் 10,856.07ஆக உயர்வடைந்திருந்தது.
இது 6.81 வீத உயர்வாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை S&P SL20 விலைச் சுட்டியிலும் 8.52 வீத உயர்வு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய பங்குளின் மொத்த புரள்வின் பெறுமதி 3.57 பில்லியன் ரூபாவாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.