விபத்துக்களின் போது தனியார் துறை ஊழியர்களுக்கும் நஷ்ட ஈடுகளை வழங்கும் வகையில் ஊழியர் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் ஊழியர் கட்டளைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அது வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்படும் விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீடு, தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படக் கூடிய மரணங்களுக்காக வழங்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகையை 5 இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.