தமிழ் – சிங்கள புத்தாண்டையொட்டி வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் தனது நாட்டுக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் விசேட கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் அதன் நாணயமாற்று பெறுமதிக்கு மேலதிகமாக 20 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி அனுப்பப்படும் வெளிநாட்டு நாணயங்களுக்கே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி இலங்கையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாகவும், வாங்கும் விலை 250 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.