கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள பிரச்சனை, பதவி உயர்வு முறைமை தொடர்பான முறைமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், தொழில் ஆணையாளர்களின் சங்கம், கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்க ஒன்றியம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை இவர்கள் இன்று முற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்துவதற்கும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.