January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேறியது!

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலம், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இன்று சபையில் சமர்பிக்கப்பட்டது.

இதன்போது, இந்த சட்டமூலம் மீது தமது எதிர்ப்பை எதிர்க்கட்சி முன்வைத்தது.

எனினும், அரசாங்கம் சட்டமூலம் மீதான விவாதத்தை தொடர்ந்தது.

இந்நிலையில் நீதி அமைச்சர் சட்டமூலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தங்களை சபையில் முன்வைத்தார்.

இதனையடுத்து வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.