வெளிநாடுகளில் இருந்து 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 09 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உரிம முறையின் கீழ், ஒவ்வொரு இறக்குமதியாளரும் தங்கள் இறக்குமதிகளை தொடர்பாக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்பதுடன், அந்த கோரிக்கையின் முக்கியத்துவத்தை நிதி அமைச்சு பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட மீன், இறைச்சி, பால், மோர், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் உற்பத்தி பொருட்கள் மற்றும் திராட்சை, அப்பிள் உள்ளிட்ட பழ வகைகள் என்பனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொருட்களில் அடங்கும்.
367 அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலை இந்த இணைப்பில் பார்வையிடலாம்