January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெட்ரோலிய களஞ்சியப் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்!

தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அந்தப் பிரிவின் தலைவராக பதவி வகித்த நாலக்க பெரேரா இராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய தலைவராக எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.

இதேவேளை தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நாளைய தினத்திற்குள் முடிவுக்கு வரும் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கை வந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து அதனை இறக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.