இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்தார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, அரசியல் தீர்வு விடயங்கள், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் வகிபாகம், அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்வேளையில் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தேனும் இலக்குகளை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சம்பந்தன், அமெரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் என்று அமெரிக்க தூதுவர், கூட்டமைப்பு தலைவரிடம் கூறியுள்ளார்.
அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பரில் கொண்டுவரும் விரிவான அறிக்கைக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.