இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அது தொடர்பான உதவித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருடனான தொலைபேசி கலந்துரையாடலை தொடர்ந்து, பஸிலின் இந்திய பயணம் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த தொலைபேசி கலந்துரையாடலின் போது, இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
EAM @DrSJaishankar and Hon'ble Finance Minister @RealBRajapaksa had a productive and cordial telephone conversation a while ago. EAM assured that #India will continue to support #SriLanka in all possible ways. They agreed to finalize a mutually convenient date in the second(1/2) pic.twitter.com/wTX2jTjtoS
— India in Sri Lanka (@IndiainSL) March 7, 2022
பஸில் ராஜபக்ஷ, பெப்ரவரி மாதத்தில் இந்திய பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், சில காரணங்களுக்காக அது ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.