அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 230 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின்போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்புகின்ற ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் தற்போது செலுத்தப்பட்டு வரும் 10 ரூபா ஊக்குவிப்புக் தொகையை 38 ரூபா வரை அதிகரிப்பதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.