October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நீதி கிடைக்க உதவுங்கள்”: மனித உரிமைகள் பேரவையில் கொழும்பு பேராயர்

File Photo

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க தலையீடு செய்யுமாறு ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த தாக்குதலை இஸ்லாமிய கடும்போக்குவாதிகளே நடத்தினர் என்று ஆரம்பத்தில் கருதிய போதும், இது அரசியல் சதியொன்றின் அங்கமாக இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் மனித உரிமைகள் பேரவையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் தாக்குதல் நடந்து மூன்று வருடங்கள் ஆகின்ற போதும், அப்போது என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றோம் என்றும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க தலையீடு செய்யுமாறு அவர் ஐநா மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தினார்.