January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெரு விளக்குகளை அணைத்து வைத்திருக்குமாறு நிதி அமைச்சர் ஆலோசனை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியால் பிரதான வீதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைத்து வைக்குமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி மார்ச் 31 ஆம் திகதி வரையில் இரவு நேரங்களில் வீதி விளக்குகளை அணைத்து வைக்குமாறு நிதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான உள்ளூராட்சி மன்றங்களின் கீழ்வரும் அனைத்து வீதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

எரிபொருளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் தினசரி ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், மின்வெட்டு நேரத்தை குறைக்கும் நடவடிக்கையாகவே வீதியிலுள்ள மின்விளக்குகள் அணைத்து வைக்கப்படவுள்ளன.