January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் புதிய சீமெந்து தொழிற்சாலை திறந்து வைப்பு!

இலங்கையில் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தலைமையில் இதன் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

63 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளை கொண்டதாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையின் ஊடாக முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும்.

உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கொழும்புத் துறைமுக நகர் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட முன்னணி நிர்மாண வேலைத்திட்டங்களுக்குத் தேவையான சீமெந்து வழங்கலை இந்தத் தொழிற்சாலையே மேற்கொள்ளும் என நிறுவனத்தின் தலைவர் நந்தன லொக்குவிதான தெரிவித்துள்ளார்.