
கண்டி எசல பெரஹராவில் கலந்துகொள்ளும் ‘நெடுங்கமுவே ராஜா’ என்றழைக்கப்படும் யானை இன்று காலை உயிரிழந்தது.
வருடாந்தம் நடைபெறும் கண்டி எசல பெரஹராவில் புனித சின்னங்களை சுமந்து செல்லும் பிரதான யானையாக இது விளங்குகியது.
69 வயதுடைய ‘நெடுங்கமுவே ராஜா’ தெற்காசியாவில் தந்தங்களை கொண்ட உயரமான யானைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த யானை, ஒவ்வொரு வருடமும் கம்பஹா நெடுங்கமுவ பிரதேசத்தில் இருந்து நடை பயணமாக பலத்த பாதுகாப்புடன் கண்டி பெரஹராவுக்கு அழைத்துச் செல்லப்படும்.
இந்நிலையில், இன்று காலை இந்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.