சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை நூறு ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி வரலாம் என்று அந்த சங்கத்தின் தலைவர் கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நிச்சயமாக பாணின் விலையை அதிகரிக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.