January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பின்வரிசைக்கு செல்லும் வீரவன்ச, கம்மன்பில!

அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

8 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதன்போது ஆளும் கட்சிப் பக்கத்தில் விமல் வீரவன்சவுக்கு 73 ஆம் இலக்க ஆசனமும் உதய கம்மன்பிலவுக்கு 78 ஆம் இலக்க ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்களாக பதவி வகித்த காலப்பகுதியில் இவர்களுக்கு முன்வரிசை ஆசனங்களே வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கைத்தொழில் அமைச்சராக பதவியேற்றுள்ள எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும் மற்றும் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்ற திலும் அமுனுகமவுக்கும் இரண்டாவது வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தான் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் இருப்பேன் என்றும், ஆனால் அமைச்சுக் கடமைகளை செய்ய மாட்டேன் என்றும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றால் தன்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.