இலங்கை முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக கடும் டீசல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதனால் பாடசாலை வாகன சாரதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒருமாத கால விடுமுறையின் பின்னர், நாளை முதல் பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாடசாலை வாகன சேவைகளை நடத்த முடியாத நிலைமையில் உள்ளதாக பாடசாலை வாகன சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
போதுமான எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் மட்டுமே மாணவர்களை ஏற்றிச் செல்ல முடியுமாக இருக்கும் என்றும், இல்லையேல் சேவைகளை முன்னெடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை வாகனங்களுக்கு டீசலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.