உயர்தரப் பரீட்சைக்காக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
பாடசாலைகள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்றுநிருபம் கல்வியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 20 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் வழமைப் போன்று தினசரி பாடசாலைக்கு அழைக்கப்பட முடியும்.
இதேவேளை 20 தொடக்கம் 40 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவாரம் விட்டு ஒருவாரம் என்ற அடிப்படையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று 40க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் மாணவர்களை சமமான எண்ணிக்கையில் மூன்று குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.