November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்யலாம்!

கொவிட் வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

மார்ச் 5 ஆம் திகதி முதல் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை மட்டக்கள்ப்பு – ஓட்டமாவடி பிரதேசத்தில் அடங்கம் செய்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கொவிட் மரணங்கள் தொடர்பில் தற்போது புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, வைத்தியசாலைகள் மற்றும் அதற்கு வெளியே இடம்பெறும் எந்தவொரு மரணத்தின் போதும் பிசிஆர் பரிசோதனை அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

எனினும் சட்ட வைத்திய அதிகாரி அறிவுறுத்தினால் மாத்திரம் பிசிஆர் பரிசோதனையை செய்ய முடியும்.

அத்துடன் கொவிட் தொற்று உறுதியாகி மரணிப்பவரின் உடலை சுகாதார பாதுகாப்பு முறைகளுடன் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்பதுடன், அதனை அவர்கள் விரும்பினால் எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.