இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பகல், இரவு வேளையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் மின்வெட்டு கால அளவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று முதல் எரிபொருள் கையிருப்பை பொறுத்து திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு நேர அளவு குறைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 28,300 மெட்ரிக் டொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் டொன் விமான எரிபொருளுடன் இரண்டு கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.