அரசாங்கத்தினால் மேலும் சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அத்துடன் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த சி.பி.ரத்நாயக்க, வன விலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இதேவேளை போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக பதவிப் பிரமானம் செய்துள்ளார்.
இதேநேரம் தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்த அருந்திக பெர்ணான்டோ மீண்டும் அந்த அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.