January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலை, மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு மத்திய வங்கி பரிந்துரை!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் சில திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று மத்திய வங்கியின் நாணய சபை தெரிவித்துள்ளது.

இதன்படி மத்திய வங்கியினால் முன்னர் பரிந்துரைக்கப்பட்டவாறு அவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாணய சபையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உடனடியா எரிபொருள் விலையையும் மற்றும் மின்சார கட்டணத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சபை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, நிலையான வைப்புத்தொகை வசதி 6.5 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் தடைகளை கவனத்தில் கொண்டு வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.