
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனக ரஞ்சனியின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களுக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று குறிப்பிட்டனர்.
”சர்வதேச நாடுகளும், மனித உரிமைப்பற்றி பேசுபவர்களும் தங்களுக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கத்தின் சங்கத்தின் தலைவி யோகராசா கனக ரஞ்சனி தெரிவித்தார்.