விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் நேற்றைய தினத்தில் விமல் வீரவன்சவும், கம்மன்பிலவும் நேற்று மாலை முதல் பதவி நீக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து வீரவன்ச வகித்த கைத்தொழில் அமைச்சுப் பதவிக்கு எஸ்.பி. திஸாநாயக்கவும், கம்மன்பில வகித்த எரிசக்தி அமைச்சு பதவிக்கு காமினி லொகுகேவும் நியமிக்கப்பட்டனர்.
இதேவேளை மேலும் அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொண்டு பவித்திரா வன்னியாராச்சிக்கு மின்சக்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் வாசுதேவ நாணயக்கார பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அவர் வகிக்கும் நீர்வழங்கல் அமைச்சு பதவிக்கு தற்போதைய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட சில அமைச்சுகளில் மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.