January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சரவை மறுசீரமைப்பு: விமல், கம்மன்பில நீக்கம்!

அரசாங்கத்தினால் திடீர் அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது எரிசக்தி, கைத்தொழில்,  மின்சாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரையில் உதயகம்மன்பில வகித்த எரிசக்தி அமைச்சர் பதவி, மின்சக்தி அமைச்சராக பதவி வகித்த காமினி லொகுகேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த பவித்திரா வன்னியராச்சி மின்சக்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அத்துடன் விமல் வீரவன்ச வகித்த கைதொழில் அமைச்சு பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.