ஜெனிவா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செலெட்டை சந்தித்துள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சருடன் நீதி அமைச்சர் அலி சப்ரி, மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.
இவர்கள் மனித உரிமைகள் ஆணையாளரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரை வெளிவிவகார அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நாளை கலந்துரையாடல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.