January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புப் பேராயர் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்தார்!

கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை சந்தித்துள்ளார்.

ஜெனிவா சென்றுள்ள பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அங்குள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்றைய தினம் ஆணையாளரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேராயரினால் மனித உரிமைகள் ஆணையாளரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல்கள் தொடர்பான விடயங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையிலேயே பேராயர், மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துள்ளார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதில் தாமதம் நிலவுவதால் அது தொடர்பில் சர்வதேசத்தை நாடுவோம் என்று பேராயர், கொழும்பில் கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.