January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சனுக்காக ஜெனிவா செல்லும் ஹரீன் – மனுஷ!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஐக்கிய மக்கள் சக்தி, ஐநா மனித உரிமைகள் பேரவையின் உதவியை நாட தீர்மானித்துள்ளனர்.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் ஜெனிவா செல்வதற்கு முன்னர் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர்.

இதன்போது ஜெனிவாவில் தமது அனுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கலந்துரையாடியதாக ஹரீன் பெர்ணான்டோ, தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.