May 22, 2025 20:08:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்துள்ள யுக்ரைன் – ரஷ்ய பிரஜைகளின் வீசாக் காலம் நீடிப்பு!

இலங்கையில் சுற்றுலா வீசாவில் தங்கியிருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரஜைகளில் வீசாக் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் 1,463 ரஷ்யா சுற்றுலாப் பயணிகளும், 3,993 யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா மற்றும் யுக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையால் அவர்களால் மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, குறித்த சுற்றுலாப் பயணிகளின் வீசா காலப்பகுதியை கட்டண அறவீடுகள் இன்றி இரண்டு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.